சிறுவனை கடித்த கட்டுவிரியன்... காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் - கடைசியில்..!

Update: 2024-05-31 13:29 GMT

திருக்குவளை அடுத்த மோகனூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் திவாகரை, கட்டுவிரியன் பாம்பு சமீபத்தில் கடித்தது. இதையடுத்து திவாகரை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். பாம்பின் விஷம் ஏறியதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சிறுவன் திவாகர், கோமா நிலைக்குச் சென்றார். வென்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 7 நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்த திவாகர் இன்று வீடு திரும்பியுள்ளார். கொடிய விஷத்தினால் கோமாவுக்கு சென்ற 10 வயது சிறுவனைக் காப்பாற்றிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்