சிவகங்கை மாவட்டம் சோலுடையான்பட்டியில் ஒரு குடம் தண்ணீருக்கு மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் பயணித்து போராடி வருகின்றனர். சோலுடையான்பட்டி கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லையொன கூறப்படுகிறது. இதனால், காட்டு வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, மணிமுத்தாறு ஆற்று படுகையில் பல மணி நேரம் சிறிது சிறிதாக சுரக்கும் ஊற்றுநீரை எடுத்து வருகின்றனர். இதனால், பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.