சிறுமியை நாசமாக்கிய காமசைக்கோ தந்தை.. துணைநின்ற தாய் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னையை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது தந்தையால் சுமார் 8 ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக காவல்துறைக்கு கடிதம் மூலம் புகாரளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனடிப்படையில், சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், இருவரையும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில், சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, குற்றத்தை மறைத்ததற்காக சிறுமியின் தாய்க்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரிக்கும், தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.