`நோ' சொன்ன நீதிமன்றம்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி மூவ்.. ED-க்கு பறந்த உத்தரவு

Update: 2024-08-07 11:57 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்து முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வு, இதுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்