சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், வினோபா நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர், அரிசி, பிரட், மளிகைப் பொருட்கள், பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, தமிழக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகவும், முதல்வர் சென்னையில் வசிப்பதால் இந்த பாதிப்புகள் குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.