கடலூரில் கொந்தளிக்கும் கடல்.. வெளுத்து வாங்கும் கனமழை - கடற்கரையில் அனுமதி இல்லை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாமியார்பேட்டை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் யாரும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. பலத்த காற்று காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள், மீன்பிடி படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடலோர கிராமங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், ராட்சத அலையும் எழுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.