திடீரென பள்ளிக்குள் கத்தி கூச்சலிட்ட மாணவிகள் அதிர்ந்து போன ஆசிரியர்கள்.. அதிர்ச்சி காட்சிகள்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைந்து, தன் மகளை தாக்கிய மாணவியை நபர் தாக்கி தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இரு தினங்களுக்கு முன்பு 7ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், பள்ளிக்கு விரைந்த மாணவி ஒருவரின் தந்தை, தன் மகளை தாக்கிய மாணவியை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பிற மாணவிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டது பரபரப்பை மேலும் கூட்டிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசிரியைகளை நபர் மரியாதை குறைவாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.