காவலர்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டம் - பரிசுத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு
காவலர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி பரிசுத்தொகையை உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் 100 மாணவர்களுக்கு, ஆண்டுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் என 4 வருடங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை 200 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பெறுவோருக்கான மொத்த பரிசுத்தொகையை, 56 லட்சத்து 58 ஆயிரமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.