மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்

Update: 2024-07-14 15:05 GMT

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் நடத்திய யூடியூப் சேனலில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவர், கரூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் பணமோசடி செய்துள்ளார். சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலில் விளம்பரம் செய்வதாக பணம் வாங்கியதாக அவர் கூறியதால், அதன் உரிமையாளர் சவுக்கு சங்கரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தநிலையில், காவல் முடிந்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வருகின்ற 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, சவுக்கு சங்கர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்