மீண்டும் பெண் காவலரிடம்... சவுக்கு தலையில் விழுந்த அடுத்த பேரிடி

Update: 2024-05-17 12:11 GMT

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் கைதான சவுக்கு சங்கரை, கடந்த 15 ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரை, சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் திருச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சவுக்கு சங்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்