மணல் முறைகேடு விவகாரத்தில் 2வது நாளாக தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளரிடம், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மணல் முறைகேடு தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம், அமலாக்கத்துறையினர் நேற்று முன் தினம் 10 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 2வது நாளாக நேற்று ஆஜரான முத்தையாவிடம், அமலாக்கத்துறையினர், 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது மணல் டெண்டர் விடப்பட்ட ஆவணங்களை, அமலாக்கத்துறையினரிடம் முத்தையா ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.