சாம்சங் பெயரில் ரூ.15 கோடி மோசடி.. திடீரென பிளேஸ்டோரில் APP மாயம்..

Update: 2024-07-25 07:50 GMT

சாம்சங் பெயரில் ரூ.15 கோடி மோசடி.. திடீரென பிளேஸ்டோரில் APP மாயம்..உள்ளே பணத்தை இறக்கி கதறும் மக்கள் - தமிழகத்தில் பேரதிர்ச்சி

பிரபல செல்போன் நிறுவன பெயரில் இயங்கி வந்த ஆன்-லைன் செயலியில் பணத்தை முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக புகாரளிக்கப்பட்டிருக்கிறது.முதலீடு பணத்திற்கு அதிக லாபம் தருவதாக கூறி பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் ஆன்லைன் செயலி ஒன்று இயங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த செயலியை, ராமநாதபுரம் மாவட்டத்தின் மாரியூர், முந்தல், ஒப்பிலான் கிராமங்களை சேர்ந்த பலர் பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் முறையாக பணம் வந்ததாகவும், பின்னர் திடீரென அந்த செயலி முடங்கி, பிளே ஸ்டோரில் இருந்து காணாமல் போனதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட செயலியில் சுமார் 15 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து இழந்திருப்பதாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராமநாதபுர மாவட்ட எஸ்.பியிடம் புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்