கூட்டுறவு சங்கத்தில் நடந்த தில்லாலங்கடி வேலை.. இருவர் அதிரடி கைது
கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மேலாளாரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தொழிலாளர் அமைப்பு சாரா கூட்டுறவு சங்கம் கிளை அலுவலகம் ஓமலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் கையாடல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் சங்கத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்த பச்சையப்பன் என்பவர் 26 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைப்புசாரா தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் கையாடல் செய்த பச்சையப்பனை அதிரடியாக கைது செய்தனர். இந்த கையாடலுக்கு உடந்தையாக இருந்த கணக்காளர் சத்யாவை தேடி வருகின்றனர்.