நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கிய இருவர்! காப்பாற்ற முயன்ற பெண்!கடைசியில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்
நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கிய இருவர்! காப்பாற்ற முயன்ற பெண்!கடைசியில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகள்கள் ரேவதி, திவ்யதர்ஷினி மற்றும் மகன் சிவஸ்ரீ துணி துவைப்பதற்காக கொத்தி குட்டை ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சிவஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி நீச்சல் தெரியாமல் குளத்தில் இறங்கிய போது, ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினர். இதனை பார்த்த ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்ற போது, அவரும் நீரில் மூழ்கிய நிலையில், மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் சடலங்களை மீட்ட நிலையில், நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தோர் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.