"பார்சல் வாங்க பஸ் நிற்கும்.. ஆனால் பயணிகளுக்காக நிற்காது.." பேருந்தை சுற்றுப்போட்ட ஊர் மக்கள்

Update: 2024-08-27 17:10 GMT

சேலத்தில் இருந்து தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் பயணி ராசிபுரம் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்குவதற்காக பயணச்சீட்டு எடுத்திருந்தார். அங்கு பேருந்து நிற்காது என நடத்துனர் கூறியதால், அவர் தனது உறவினர்களிடம் போனில் தகவல் தெரிவிக்தார். பின்னர் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையை அருகே வந்த பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பார்சல் வாங்குவதற்காக பல்வேறு இடங்களில் நிறுத்தும் பேருந்துகள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மட்டும் ஏன் நிறுத்துவதில்லை என பெண் பயணி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்