தந்தி டிவி செய்தி எதிரொலியாக, உடையும் நிலையில் இருந்த ஏரிக்கரை ஜேசிபி எந்திரங்களை கொண்டு சீரமைக்கப்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏரியின் கரை பாலம், பாலமாக வெடித்து காணப்பட்டது. ஏரி பாதி அளவு நிறைந்த நிலையில், கரை உடைந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும், கரையை பலப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்களின் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஜேசிபி எந்திரம் மூலம் கரை சீரமைக்கப்பட்டது. நாளை முதல் ஏரியில் தண்ணீர் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.