"ரூ500 கோடி சொத்து.." - அதிமுக Ex MLA விடம் பலே மோசடி கில்லாடி 'பில்லப்பன்'-ஐ தட்டிதூக்கிய போலீஸ்
வெளிநாட்டில் 500 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலதிபர்களிடம் மோசடி செய்த பலே கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.
Vovt
மயிலாடுதுறையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் அசலாம். தொழிலதிபரான இவர், வியாபார ரீதியாக மலேசியாக சென்று வரும்போது, சிவகங்கை மாவட்டம் பட்டமங்களத்தை சேர்ந்த பில்லப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், தனக்கு மலேசியாவில் 500 கோடிக்கும் மேலாக சொத்துக்கள் உள்ளதாகவும், அதை விற்கவும், பரமாரிக்கவும் தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறிய பில்லப்பன், கடந்த 2014 ஆம் ஆண்டு, அசலாமிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றிருக்கிறார். வட்டியுடன் திருப்பி கொடுத்து விடுவதாக கூறிய நிலையில், இதே பாணியில் பூம்புகார் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான ரங்கநாதன் உட்பட பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து வந்தது தெரியவந்தது. உடனே, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2015-ல் போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பில்லப்பனை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்கு தப்பிக்க முயன்ற பில்லப்பனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.