அரசு மருத்துவமனையில் ஸ்கேனுக்கு ரூ.2500... அமைச்சர் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

Update: 2023-09-08 04:17 GMT

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மையத்தை பார்வையிட்டார். அப்போது ஸ்கேன் எடுக்க வந்திருந்த மக்களிடம் விசாரணை செய்த போது, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஒவ்வொருவரிடமும் தலா 2500 வரை பணம் கட்டணமாக வசூல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் மக்களுக்கு இலவசமாக சேவை வழங்கவே தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஸ்கேன் எடுக்க வருபவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக எடுத்து அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், தற்போது பணம் வசூலிக்கப்பட்டதால் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டார். அதே சமயம் தேனி மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக எம்ஆர்ஐ பரிசோதனை கருவியை தேசிய நலவாழ்வு குழு மூலம் வாங்கிடவும் அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்