"சச்சின் சாவந்த்க்கும் பிரபல மலையாள நடிகைக்கும் தொடர்பு?" - அமலாக்கத்துறை வெளியிட்ட பகீர் தகவல்

Update: 2023-09-01 10:05 GMT

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கைதான சுங்கத்துறை அதிகாரியிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள நகைகளை பரிசாக மலையாள நடிகை நவ்யா நாயர் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். இதற்கு முன்பு மும்பையில் அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் துணை இயக்குனராக இருந்தார். அப்போது சச்சின் சாவந்த் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. தொடர்ந்து அவரை கடந்த ஜூன் மாதம் மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது. அவரது செல்போனை பரிசோதித்தபோது சச்சின் சாவந்துக்கும், பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பலமுறை நவ்யா நாயரை சந்திப்பதற்காக கேரளாவுக்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கில் மத்திய அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் , சச்சின் சாவந்துக்கும், நடிகை நவ்யா நாயருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது. பலமுறை நவ்யா நாயரை சந்திப்பதற்காக சச்சின் சாவந்த் கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அவருக்கு விலை மதிப்புள்ள நகை, பொருட்களை பரிசாக அளித்து உள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்