தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணம் குறைப்பு - தொடங்கியது கணக்கெடுப்பு
தமிழகத்தில் பொது சேவை மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், வீடுகள் கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாகவும், 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாகவும் உள்ள மின் தூக்கி இல்லாத, அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டணம் 8 ரூபாய் 15 காசுகளாக இருந்த நிலையில், 5 ரூபாய் 50 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கட்டண குறைப்பு இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மூன்று மாடி உடைய வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில், "1D"-ல் இடம்பெறும் பொது சேவை பிரிவுக்கு, 9 லட்சம் மின் இணைப்புகள் மாற்றப்பட்டன. அதில் ஒவ்வொரு இணைப்பும் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள சலுகையில் இடம்பெறும் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, மின் கட்டணத்தை குறைக்கும் வகையில், கட்டண விகிதம் மாற்றும் பணி தொடங்கியுள்ளது.