ஒரு கிராமத்தையே உலுக்கும் புற்றுநோய்.. மடியும் மக்கள்" - பெரும் அச்சத்தில் ராம்நாடு
ஒரு கிராமத்தையே உலுக்கும் புற்றுநோய்.. மடியும் மக்கள்" - பெரும் அச்சத்தில் ராம்நாடு
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உப்பளங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தனியார் நிறுவன உப்பளம் ஒன்றில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால், பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனை கருதி ரசாயன ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.