திரண்ட மக்கள்... குவிந்த போலீசார்... முதியவரின் செயலால் பதற்றம்... ராம்நாடு அருகே பரபரப்பு

Update: 2024-08-16 17:21 GMT

ராமநாதபுரத்தில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சித்தார்கோட்டை ஊராட்சியில் உள்ள ஜமீன் தார் வலசை கிராமத்தில் இருந்து, தேவிபட்டின ஊராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியானது, நீதிமன்ற உத்தரவின்பேரில் நடைபெற்றது. இவ்வாறு தண்ணீரை எடுத்து சென்றால், தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும் என்று கூறி, ஜமீன் தார் வலசை கிராமத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் கல்வீச்சிலும் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்