சவுதியில் வேலை.. பறிபோன உயிர்- ரூமுக்குள் சடலமாக கிடந்த கணவன்- தலையில் அடித்து கதறும் மனைவி

Update: 2024-08-14 14:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியைச் சேர்ந்தவர் மீனவர் எழுவர்ராஜா... இவருக்கு கற்பக வள்ளி என்பவருடன் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக எழுவர்ராஜா சவுதி அரேபியாவுக்கு மீன்பிடி கூலியாக வேலைக்குச் சென்றுள்ளார்...

பணிக்கு சென்றுவிட்டு தன் அறைக்கு வந்த எழுவராஜா உயிரிழந்து கிடப்பதாக அவருடைய அறை நண்பர்கள் குடும்பத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்... இதனால் எழுவர் ராஜாவின் உறவினர்கள் பதறிப்போயினர்... 20 நாள்களுக்கு முன்பு தான் எழுவர் ராஜா சவுதி சென்ற நிலையில், ஒரு மாதம் கூட ஆகாத சூழலில் அவர் உயிரிழந்துள்ளதாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இதையடுத்து எழுவராஜா உடலை தாயகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவருக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்... மனைவி கற்பகவள்ளியும், உறவினர்களும் கதறியழுத காட்சி கலங்க வைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்