வைகை ஆற்றின் புதிய பாலம்.. தர்ணா போராட்டத்தில் மக்கள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு | Ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம், வன்னிவயல் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடியே 90 லட்ச ரூபாய் செலவில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பாலம் விபத்து ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி வன்னிவயல், கருத்தனேந்தல், சித்தூர் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படாதபடி பாலத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலம் வடிவமைப்பில் மாற்றம் செய்யக் கோரி ஏற்கெனவே ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.