2 மாதங்களாக இல்லாத மருத்துவர்கள்... பூட்டிக்கிடக்கும் ஆபரேஷன் தியேட்டர்...குமுறும் மக்கள்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
உள்ள கண் சிகிச்சை பிரிவில், இரண்டு மாதங்களாக, உரிய
மருத்துவர்கள் இல்லாததால் கண் சிகிச்சைக்கு வரும்
நோயாளிகள் பெரும் அவதி அடைந்து, திரும்பிச் செல்லும்
சூழல் தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக அறுவை
சிகிச்சை மருத்துவர் இல்லாததால் கண் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை அரங்கம் திறக்கப்படாமல் உள்ளது. கண் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பரமக்குடி, மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.