தென்னந்தோப்புக்குள் கிடந்த ஆண் சடலம்... ஊரையே பரபரப்பாக்கிய ஒற்றை சம்பவம் - நடுங்கிய ராம்நாடு
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இளைஞர் ஒருவர் மர்ம மரணமடைந்திருப்பது அவரது உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் நாரையூரணி அருகே தென்னந்தோப்புக்குள் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்துள்ளனர். விசாரித்ததில் அவர் துத்திவலசையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாதகுமார் என்பது தெரியவந்துள்ளது.
போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்த நிலையில், பாதகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என கூறி அவரது உறவினர்கள் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.