தானாக வெளியேறி பாய்ந்த குண்டு..உயிருக்கு போராடிய இளைஞர் - போட்டு ஓடிய சக நண்பன்.. சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கியை தயார் செய்த போது குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலுப்பூரை அடுத்த வேப்பவயல் பகுதியை சேர்ந்த லட்சுமணன், தேக்கமலை, சரவணன், ஆறுமுகம் ஆகிய 4 பேரும், பறவைகள் வேட்டையாட சென்றுள்ளனர். எரிச்சங்களை குளக்கரையில் 2 நாட்டு துப்பாக்கிகளை தயார் செய்த போது, ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, லட்சுமணன் மீது பாய்ந்து ரத்த வெள்ளதில் சாய்ந்துள்ளார். ஆறுமுகம் என்பவர் தப்பியோடிய நிலையில், மற்ற 2 நண்பர்களும் சேர்ந்து, லட்சுமணனை மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் லட்சுமணன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தேக்கமலை மற்றும் சரவணன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.