புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பதினெட்டு பட்டி கிராமமக்கள், விரதம் இருந்த பக்தர்கள், மேளதாளங்கள் முழங்க மதுகுடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இறக்கப்பட்டு மதுவை கொண்டு, செல்லியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.