கலவரம் செய்ய வேறு மாவட்டத்தில் இறங்கிய நெல்லை கும்பல்.. கடைசி நொடியில் தடுத்த போலீஸ்
புதுக்கோட்டையில் தனியார் விடுதியில் பயங்கர வெடி பொருட்கள், ஆயுதங்களோடு சிக்கிய 5 பேரை அம்மாட்ட போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் மாற்றி, மாற்றி பேசியவர்களிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க, அசம்பாவிதம் செய்தால்தான் பெரிய ஆளா வரமுடியும் என்று நினைத்து ஆயுதங்கள், வெடிப்பொருட்களோடு வந்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து 5 பேரையும் சாதித்திட்டம் தீட்டுதல், ஆயுதங்கள், வெடிப்பொருட்களை வைத்திருப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் மூன்று பேர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதாவது விஷயத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.