ஈரக்குலையை நடுங்க விட்ட பெண் மருத்துவர் கொலை.. - புதுச்சேரி ஜிப்மர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு

Update: 2024-08-19 02:52 GMT

ஈரக்குலையை நடுங்க விட்ட பெண் மருத்துவர் கொலை.. - புதுச்சேரி ஜிப்மர் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தொடர் போராட்டம் காரணமாக, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்