புதுச்சேரி, வீராம்பட்டினம் பகுதியில் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி பெருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு இரவு பல்வேறு வாகன சேவை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. பாரம்பரியப்படி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.