புதுச்சேரியின் கிராமப்புறத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மழலையர் ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் சார்பாக பெற்றோர்கள் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் துணை ஆய்வாளர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டனர்.