வாணியம்பாடி அருகே, உடற்கல்வி ஆசிரியர் தவறாக பேசியதாக குற்றம் சாட்டி, மாணவிகளை பெற்றோர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கிரி சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, உடற்கல்வி ஆசிரியராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஆலங்காயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குர, கபாடி போட்டிக்காக மாணவர்களை அழைத்துச் சென்ற போது, மாணவிகளை தவறாகவும், தரகுறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளிக்கூடத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர். தகலறிந்து சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடற்கல்வி ஆசிரியர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் கலைந்து சென்றனர்.