நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் - அமைச்சர் சொன்ன அந்த வார்த்தை - கலைந்து போன போராட்டக்காரர்கள்

Update: 2023-08-06 14:24 GMT

பணி நிரந்தரம் செய்ய கோரி, நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலத்தில் உள்ள அமைச்சர் கணேசனின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். அங்கு தொழிலாளர்களுக்கு இரவு உணவு வழங்கிய நிலையில், அதை வாங்காமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனிடையே, ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, அமைச்சர் கணேசன் உறுதி அளித்ததை அடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்