பேருந்து நிறுத்தம் கோரி போராட்டம்..வந்த வழியாக திரும்பிச் சென்ற கலெக்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
தென்காசி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், பேருந்து நிறுத்தம் இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய சூழலில், பேருந்து நிறுத்தம் கேட்டு தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அரசு பேருந்துகளை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அவ்வழியாக காரில் வந்த ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் பிரச்சினையை தீர்க்காமல், வந்த வழியாக திரும்பி சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார், அவர்களை சமாதானம் செய்து பேருந்துகளை விடுவித்தனர்.