பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டு, தி. நகர், ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3 முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அலங்கார வண்ண விளக்குகள், வரவேற்பு பேனர்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்றிரவு தங்கும் பிரதமர் மோடி, மறுநாள் வேலூர், நீலகிரி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்.