கொட்டிய மழை.. எழுந்த புகார்.. உடனே ஸ்பாட்டுக்கு பறந்த ராதாகிருஷ்ணன் IAS
கிண்டி ரேஸ் கோர்ஸ், ஃபர்லாங் சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
மைதானத்திற்குள் தேங்கும் தண்ணீர், வேளச்சேரி ஃபர்லாங் சாலையில் வெளியேற்றப்படுவதால், மழைநீர் தேங்குகிறது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மணி நேர இடைவெளியில் அதிக மழை பெய்ததே தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என தெரிவித்தார். மேலும், மைதானத்திற்குள் உள்ள மழைநீர் வடிகால் அமைப்பில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்த நிலையில், அவற்றை சீர்மைக்க அறிவுறித்துயுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கும் அளவு காட்சிப்படுத்தப்பட்டு கேமரா மூலம் கண்கணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.