ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தலைமுறையினர் ஒற்றுமை வழிபாடு...வெள்ளை சேலையில் பொங்கல் வைத்த பெண்கள்

Update: 2024-01-16 16:43 GMT

சிவகங்கை அருகே சலுகைபுரத்தில், பச்சை நாச்சியம்மனை குலதெய்வமாக வழிபடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தலைமுறையினர், மாட்டு பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்தனர். இதற்காக 15 நாட்கள் விரதம் இருந்து, பச்சை நாச்சியம்மனை வழிபட்டு, பாலடி கருப்பு உள்ளிட்ட தெய்வங்கள் சாமியாடி, வீடுவீடாக சென்று அருள் வாக்கு சொல்கின்றனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி, ஒரே அளவிலான கலயத்தில் பால் எடுத்து ஊர்வலமாகச் சென்று பூஜைகள் செய்து, குலவையிட்டு பொங்கலிட்டனர். பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை உடுத்தி அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். முன்னோர் கால பாரம்பரிய பழக்கத்தை கடைபிடித்ததால் வாழ்க்கை வளம் பெறும் என்பது இவர்களது நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்