பொள்ளாச்சியில் பரவிய அதிர்ச்சி வீடியோ... போலீஸ் ஸ்டேஷனை பரபரப்பாக்கிய பொதுமக்கள்
பொள்ளாச்சி அருகே கோட்டூர் போலீஸ் நிலையம் முன்பு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு நிலவியது
பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர், தான் சாதிக் பாஷா, கணேசன் மூர்த்தி, செந்தில் நாதன் ஆகிய மூவருக்கும் பணம் கொடுத்திருந்ததாகவும், ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாகவும் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணேச மூர்த்தியை மட்டும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் சாதிக் பாஷா, செந்தில்நாதன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் கெங்கம்பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் சக்தி குமாரின் தற்கொலைக்கு நியாயம் கேட்டும், தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டூர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்தனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சமாதானம் பேசிய நிலையில்
பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். நாளைக்குள் தலைமறைவாகியுள்ள 2 குற்றவாளிகளையும் கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.