ரஷ்ய கலாச்சாரம்.. இலக்கியம்.. பாரம்பரியம் - நடனத்தின் மூலம் விளக்கிய ரஷ்ய கலைஞர்கள்
பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்ய நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன... ரஷ்ய கலாச்சார நிகழ்ச்சியில் 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம் இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் நடனமாடி அசத்தினர். மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.