கணவனை கைது செய்த போலீசார்...துடிதுடித்து வாகனத்தின் பின்னாடியே அழுது கொண்டு ஓடிய மனைவி
பெரம்பலூர் அருகே கை.களத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...ஊரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குத் தென்புறம் 10 கடைகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலிருந்து வந்துள்ளது. அந்த இடம் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு தேவைப் படுவதால் கையகப்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களில் வருவாய்த் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இரு தரப்பினர் சார்பில் நீதிமன்ற வழக்கு நடைபெற்று முடிவில், நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடத்தை கையகப்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள கட்டடங்களை அகற்ற முற்பட்டனர். அப்போது கட்டட உரிமையாளர்கள், பொதுமக்கள் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது... வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்த முற்பட்ட நிலையில், சமாதானத்திற்கு உடன்படாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...