காதலை கண்டித்த பெற்றோர் - வீட்டிற்கு சென்று இளைஞர் தகராறு..மாணவி எடுத்த விபரீத முடிவு

Update: 2023-07-30 08:21 GMT

நாகை மாவட்டம் அய்யூரை சேர்ந்தவர் ஷாலினி. அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்த இவரை, அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர்கள் ஷாலினியை கண்டித்து பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே முடக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவரது சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுமி வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த ஷாலினியின் உறவினர்கள், மாணவியின் உடலை காவல் நிலையம் முன்பு வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் சின்னதுரை, அவரது சகோதரர் கண்ணன் மற்றும் தந்தை ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்