இரவோடு இரவாக அரசு பள்ளி கட்டடங்கள் இடிப்பு - பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மீது புகார்

Update: 2022-10-20 15:07 GMT

இரவோடு இரவாக அரசு பள்ளி கட்டடங்கள் இடிப்பு - பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மீது புகார்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே இரவோடு இரவாக அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் மாணவர்கள் மரத்தடியில் பயிலும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வடலூர் அருகே கு.நெல்லிகுப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் இருந்த பாழடைந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடத்தை கட்டுமாறு 2017ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், இரவோடு இரவாக பாழடைந்த கட்டடத்தோடு, மற்றுமொரு கட்டடத்தையும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

இதனால், வகுப்பறைகளின்றி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயின்று வருகின்றனர்.

மேலும் கட்டடத்தில் இருந்த 6 டன் இரும்பு பொருட்களை விற்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்