உதகையில் உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது... அரசு தாவரவியல் பூங்கா, பிரிக்ஸ் திறந்தவெளி மைதானம், படகு இல்லம் போன்ற பகுதிகளில் அதிக உறைபனி காணப்பட்டது... தலைகுந்தா பகுதியில் வாகனங்கள் மீதும் புற்கள் மீதும் பனி கட்டிகளாக உறைபனி கொட்டிக் கிடந்தது... நகரில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 0.8 டிகிரி செல்சியசும், தலைகுந்தா உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது... இதனால் விவசாயிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.