ஊட்டியில் தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது... கூடலூர் சாலை, எமரால்டு சாலை, கோத்தகிரி சாலையில் வாகன ஓட்டிகள் முறிந்து விழுந்த மரங்களால் அவதி அடைந்தனர். போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சாலையில் விழுந்துள்ள மரங்களை அகற்றி வருகின்றனர்... நெடுஞ்சாலை துறையினர் நிலச்சரிவை சீரமைத்து வருகின்றனர். சூறாவளி காற்று வீசுவதால் மின்கம்பங்கள் சேதமான நிலையில் மின்தடை ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொட்ட பெட்டாவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு தொட்டபெட்டா சாலை மூடப்பட்டுள்ளது.