கொட்டும் மழையில் தவழ்ந்த மூதாட்டி - ஓடிவந்து முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்
ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் தவழ்ந்து கொண்டிருந்த மூதாட்டிக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எதிரில், மூதாட்டி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடியே, தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார். அந்த பக்கமாக செல்லும் அனைவரிடமும் கையை நீட்டி உதவியும் கேட்டார். யாரும் உதவாத நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சரவணன், மூதாட்டியை தூக்கி சென்று, முதலுதவி அளித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.