"25 பைசாவுக்கு 1 கி.மீ. பயணம்" - ஒகயா நிறுவனத்தின் புதிய வகை மின்சார பைக் அறிமுகம்

Update: 2024-05-04 03:11 GMT

ஒகயா நிறுவனத்தின் உயர்தர பிராண்ட்டான ஃபெரட்டோ, டிஸ்ரப்டர் என்ற புதிய மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 129 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 25 பைசா மட்டுமே செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் உள்ள நவீன லித்தியம்-அயன் பேட்டரிக்கு 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேட் இன் இந்தியா தயாரிப்பு என்ற திட்டத்தை டிஸ்ரப்டர் நிறைவு செய்துள்ளதாக, ஒகயா நிறுவனத்தின் MD அன்சுல் குப்தா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்