"இனி குழந்தைகளை தத்தெடுக்க.." - `புதிய மாற்றம்...' வெளியான முக்கிய தகவல்

Update: 2023-12-14 14:02 GMT

குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க பிரத்யேக போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள், அதைப்போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி மாநிலங்களைவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, குழந்தையை 5 ஆண்டுகள் பராமரித்து அதன்பிறகு சான்று பெற்ற பிறகே தத்தெடுக்க முடியும் என்ற கால அளவு 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தத்தெடுக்கும் பெற்றோர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் விதிமுறைகள் மாற்றப்பட்டு, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். குழந்தைகளைத் தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க, CARINGS என்ற பிரத்யேக போர்ட்டல், எல்லோரும் கையாளும் வகையில் எளிதான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், காலதாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்