"10வது நாளாக பணிகளை மேற்கொண்டுள்ள என்.எல்.சி."

Update: 2023-08-05 11:12 GMT

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பரவனாறு கால்வாய் அமைக்கும் பணியை என்.எல்.சி நிறுவனம் 10-வது நாளாக மேற்கொண்டு வருகிறது.

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்தி, புதிதாக பரவனாறு கால்வாய் வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணியின்போது, வயலில் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனினும், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பயிர் செய்யப்பட்ட இடத்தில் கால்வாய் வெட்டியதற்காக, ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 20 விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், 6 பேருக்கு மட்டும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், 10வது நாளாக கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்