குழந்தை போல் காலை தூக்கி தூக்கி க்யூட்டாக விளையாடிய யானைகள் - டூரிஸ்ட்களை குஷிப்படுத்திய அழகு காட்சி
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. யானைகள் அலங்கரிக்கப்பட்டு, அவைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. யானைகள் தினத்தன்று, தெப்பக்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக அனைத்து யானைகளும் அணிவகுப்பாக நடந்து வந்தன. பிறகு பாகன்கள் சொல்லும் படி இரண்டு கால்களில் நிற்பது, பிளிறுவது உள்ளிட்டவற்றை செய்து காட்டின. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.